Connect with us

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் புதிய படத்துக்கு தயாரிப்பாளர் ரெடி? – வெளியான தகவல் இதோ!

Featured

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் புதிய படத்துக்கு தயாரிப்பாளர் ரெடி? – வெளியான தகவல் இதோ!

சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றியடைந்தால், அந்த கூட்டணி மீண்டும் இணையவேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது வழக்கம். அதற்கான சமீபத்திய உதாரணமாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சொல்லப்படலாம்.

அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முதல் முறையாக இணைந்த இப்படம், வெளியாகியதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மாஸான கதைக்களம் மற்றும் நடிப்பின் துளி கலந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால், 2025 ஆம் ஆண்டின் ஹிட் படங்களில் ‘குட் பேட் அக்லி’ சிறப்பாக இடம் பிடித்துள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். ‘AK 64’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை தயாரிக்க உள்ள நிறுவனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் விநியோகத்தை மேற்கொண்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் ‘AK 64’ படத்தையும் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கூட்டணி, மீண்டும் ஒரு மாஸ் வெற்றியை உருவாக்குமா என்பது அறிய ஏற்கெனவே உற்சாகம் நிலவுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top