Connect with us

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் – வைரல் போட்டோஸ்

Cinema News

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் – வைரல் போட்டோஸ்

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரின் திருமணம் இன்று படு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது .

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர் .திரை வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போல் தனது சொந்த வாழ்க்கையிலும் பிரம்மாண்டமாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சில பல காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டனர் .

இந்நிலையில், ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்தி என்பவருடன் , ஐஸ்வர்யா ஷங்கருக்கு இன்று இரண்டாம் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது .

இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நயன்தாரா விக்னேஷ் சிவன் என பல உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியாவின் பதில் தாக்குதல் Operation Sindoor… பிரபலங்களின் உருக்கமான பதிவு!

More in Cinema News

To Top