Connect with us

2030 அகம​தா​பாத்​தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sports

2030 அகம​தா​பாத்​தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிளாஸ்கோ:
2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 72 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த உரிமையை பெற இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டியிட்டன. கடந்த சில மாதங்களில் காமன்வெல்த் அமைப்பு அதிகாரிகள் அகமதாபாத் நகரில் ஆய்வு நடத்தி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் காமன்வெல்த் பொதுக் குழுவில் உள்ள 74 உறுப்பினர்கள், 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டியை அகமதாபாத் நகரில் நடத்த ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து 2030-ல் காமன்வெல்த் விளையாட்டு அகமதாபாத் நகரில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் டாக்டர் டொனால்டு ருகாரே கூறியதாவது, “இந்தியா இளம் வீரர்கள், திறமை, வளமான கலாச்சாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை கொண்ட நாட்டாக இருக்கின்றது. இதன் மூலம் 2030-ல் அகமதாபாத் நகரில் காமன்வெல்த் விளையாட்டு வெற்றிகரமாக நடைபெறும்.”

2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தும் முன்மொழிவு தொடர்பிலும் இந்திய அரசு முன்வந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு நகரங்களை தேர்வு செய்யும் பட்டியலில் அகமதாபாத் நகரும் இடம்பெற்றுள்ளது, மேலும் அந்த மாநகரில் தரமான மைதானங்கள், வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

2030 காமன்வெல்த் போட்டியை நடத்த உரிமை பெறுவதில் அகமதாபாத் நகருடன் நைஜீரியாவின் அபுஜா நகரும் போட்டியிட்டிருந்தது, ஆனால் காமன்வெல்த் அமைப்பு அகமதாபாத் நகரை தேர்வு செய்துள்ளது. முதன்மை காமன்வெல்த் போட்டி கனடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்தியாவில் இதுவரை முதன்முறை 2010-ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடைபெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'நான் நாத்திகன்’ – ராஜமௌலியின் கூற்று சூடுபிடித்த விவாதம்!

More in Sports

To Top