Connect with us

“Captain Miller படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?!”

Cinema News

“Captain Miller படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?!”

நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.

3 வருடங்களுக்குப் பின் தனுஷ் படம் பொங்கலுக்கு வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். 1930 முதல் 40களில் நடக்கும் பீரியட் ஜானரில் கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து மிரட்டியுள்ளார். தனது கிராம மக்களுக்காக பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்கும் போராளி, கொள்ளைக்கரான், ராணுவ வீரன் என நடிப்பில் வெரைட்டி காட்டி உள்ளார்.

கேப்டன் மில்லர் படம் வெளியான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இரண்டு நாளில் 7 முதல் 9 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினமான திங்கள்கிழமை ரூ. 6.50 கோடியை வசூலித்தது. ஐந்தாம் நாளான நேற்று ரூ 4.50 கோடியை வசூலித்துள்ளது. அதன்படி ஐந்து நாட்களில் ரூ.35.7 கோடியை வசூலித்துள்ளது.

படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைத்து வருகிறது.மேலும் இது படத்தின் ஒட்டுமொத்த வசூல் 50 கோடிக்கு மேல் எடுத்துள்ளது. ‘கேப்டன் மில்லர்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழ்நாட்டில் ரூ 35 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் ‘கேப்டன் மில்லர்’ படம் சிறப்பாக ஓடி வருகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கவினின் ஸ்டார் - முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top