Connect with us

29 ஆண்டுகளுக்கு பின் பாட்ஷா படம் குறித்த உண்மையை போட்டுடைத்த வைரமுத்து..!!

Cinema News

29 ஆண்டுகளுக்கு பின் பாட்ஷா படம் குறித்த உண்மையை போட்டுடைத்த வைரமுத்து..!!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்படப் பாடலாசிரியராக வலம் வரும் கவிஞர் வைரமுத்து கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தில் பணியாற்றியபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்று கேட்டார். அதற்கு நான் ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ வாங்குகிறேன் என்றேன். இதை கேட்டு அவர் அதிர்ச்சியாகி நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். அதன் பின்பு அவர், ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்று கூறினார்.

இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் முடிவு என்றேன். அவரும் ‘பாடல் எழுதுங்கள் பார்க்கலாம்’ என்றார். எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார். நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன்.

இதையடுத்து பாட்ஷா படம் வெளியாகி அமோகவ வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.

ஒரு நாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர், ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீரப்பன் உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார். அங்கு சென்றதும் என் கையில் ஒரு உறை தந்தார். பெற்றுக்கொண்டு ‘என்ன இது?’ என்றேன். அதற்கு அவர், ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார். நன்றி சொல்லி பெற்றுக்கொண்டேன்.

தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டு அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திமுக அரசைக் கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top