Connect with us

வசூல் வேட்டை நடத்தும் ஆதியின் கடைசி உலகப்போர் – இரண்டு நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

வசூல் வேட்டை நடத்தும் ஆதியின் கடைசி உலகப்போர் – இரண்டு நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் துள்ளலான துடிப்பான இசையமைப்பாளராகவும் துறுதுறுவான நடிகராகவும் வலம் வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆதி .

இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது கருத்து சொல்லும் கிக்கான இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆதியின் தயாரிப்பில் அவரே இயக்கி , நடித்து , இசையமைத்திருக்கும் படம் தான் ‘கடைசி உலகப் போர்’ .

டீசர் மற்றும் ட்ரைலரில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இப்படம் கடந்த இரு நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது . வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலிலும் தூள் கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளை விட்டு OTTக்கு வரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top