Connect with us

திருமணத் தகவலை உறுதிப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன் – வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வைரல்!

Featured

திருமணத் தகவலை உறுதிப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன் – வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வைரல்!

2016ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். அதன் பிறகு அருள் நிதியுடன் பிருந்தாவனம், விஜய் சேதுபதியுடன் கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் அவர் நடித்த ராஜ விக்ரமர்கா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்களில் குடும்பக் கதாபாத்திரங்களில் நடித்த தான்யா, சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், தற்போது தான்யா தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்துள்ளார். Benz திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கௌதம் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வது போல், தான்யா தனது வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top