Connect with us

புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா- குவியும் வாழ்த்துக்கள்..!!

Cinema News

புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா- குவியும் வாழ்த்துக்கள்..!!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. மாதவனின் என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய மாற்றை கொடுத்தது அதற்கடுத்து சினேகாவின் ரேஞ்சே மாறிவிட்டது .

பின்னர் சூர்யாவுடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என தமிழ் சினிமாவின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மட்டுமல்லாமல் ஐவரும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் .

இதையடுத்து நடிகர் பிரசன்னாவை நீண்ட நாள் காதலித்து வந்த நடிகை சினேகா இருவீட்டார் சம்மதத்துடன் ஜாம் ஜாம் என திருமணம் செய்துகொண்டார் .

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதுநாள் வரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்து வந்த நடிகை சினேகா தற்போது சொந்தமாக சினேகாலயா சில்க்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Cinema News

To Top