Connect with us

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா? – இதோ அந்த ஜோடியின் புகைப்படம்!

Featured

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா? – இதோ அந்த ஜோடியின் புகைப்படம்!

பழமை வாய்ந்த நடிகை, தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முக்கியமான இடம் பெற்ற பி. சரோஜா தேவி இன்று காலை காலமானார். 87 வயதாகிய அவர், உடல்நலக்குறைவால் பெங்களூருவிலுள்ள தனது இல்லத்தில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பி. சரோஜா தேவி, 1955ஆம் ஆண்டு வெளியான ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்தார். தமிழில் முதன்முறையாக நடித்த படம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘நாடோடி மன்னன்’ ஆகும். அதன் பின்னர் ‘அன்பே வா’, ‘ஆசைமுகம்’, ‘ஆலயமணி’, ‘படகோட்டி’, ‘பார்த்திபன் கனவு’, ‘கல்யாண பரிசு’, ‘எங்கள் வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

அவரது சிறந்த நடிப்புக்காக இந்திய அரசு வழங்கும் பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் சூர்யா நடித்த ‘ஆதவன்’. 2020ஆம் ஆண்டு, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த ஒரு கன்னடப் படத்தில் சிறிய கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்.

சினிமாவை ஆரம்பத்தில் பெரிதாக விரும்பாதவர் எனத் தெரிவித்த சரோஜா தேவி, திருமணம் செய்த பிறகு திரையுலகிலிருந்து விலகலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் 1967ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பொறியாளர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்த பிறகு, அவர் திரையுலகில் இன்னும் பல முன்னணி வேடங்களில் நடித்துத் திறமை காட்டினார். சரோஜா தேவி – ஸ்ரீ ஹர்ஷா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Featured

To Top