Connect with us

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

Featured

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

தென்னிந்திய சினிமாவின் திலகம், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு 87 வயதாகிறது. உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூருவில் உள்ள தன் இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய சரோஜா தேவி, தனது very first திரைப்படத்திற்கே தேசி விருதை பெற்றார். பின்னர் 1958 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். நடித்த “நாடோடி மன்னன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் “அன்பே வா”, “ஆசை முகம்”, “ஆலயமணி”, “பார்த்திபன் கனவு”, “கல்யாண பரிசு”, “எங்கள் வீட்டு பிள்ளை” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இன்று அவரது மறைவுக்கு திரையுலகத்தினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Featured

To Top