Connect with us

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதீங்க…கோபமடைந்த நடிகை ராதிகா!

Cinema News

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதீங்க…கோபமடைந்த நடிகை ராதிகா!

நம்முடைய தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை சிறந்த நடிகையாக இருப்பவர்கள் பல அதில் ஒருவர் தான் நடிகை ராதிகா…பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தன்னுடைய மிகவும் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்…

வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ராதிகா…இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்…

இவர் நடித்த சித்தி, அண்ணாமலை, செல்லமே சீரியலை எல்லாம் கொண்டாடாத மக்களே இருக்க மாட்டார்கள்….என்றும் சொல்லலாம்…அதாவது சன் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்தும் நடித்தும் வந்த ராதிகா இப்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரை தயாரித்து வருகிறார்…இந்த சீரியல் குடும்ப பந்தத்தை வைத்து தான் இருக்கின்றது…

நடிகை சமீபத்தில் வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் கலந்துகொண்டார்…அங்கு நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்தும் கொண்டார் அவை வைரல் ஆகி வருகின்றது…

அப்போது பேசும்போது பிக்பாஸில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் அது தான் உள்ளது என்றும் இது தேவையற்றது என்றும் சொல்லி இருக்கின்றார்…அதனை போல இளம் பெண்கள் போனிலேயே மூழ்கி கிடக்காமல் இருக்க வேண்டும் என்றும் வெளியுலகத்தில் இருங்கள் என்றும் அவர் சொல்லி இருக்கின்றார் அவரின் இந்த சொற்கள் வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்ட தமன் – தெலுங்கு திரையுலகில் என்ன பிரச்சனை?

More in Cinema News

To Top