Connect with us

திருமணம் எப்போது..? நடிகை ஓவியா பதில்

Actress Oviya

Cinema News

திருமணம் எப்போது..? நடிகை ஓவியா பதில்

நடிகை ஓவியா நீண்ட காலம் சினிமாவில் நடிக்காத நிலையில், தனது திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் தெரிவித்துள்ளார்.

2007இல் கங்காரூ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முதல்முதலாக நடிகை ஓவியா அறிமுகமானார். அதன் பிறகு 2009இல் நாளை நமதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அதற்கு அடுத்து வந்த களவாணி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு கலகலப்பு, மூடர் கூடம் மற்றும் மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். எனினும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை.

இதற்கிடையே விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

32 வயதான ஓவியா எப்போது திருமணம் செய்வார் என்ற இந்த கேள்விக்கு பதிலளித்த ஓவியா, தான் எதையும் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை என்றும் தனியாக இருக்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் தனுஷ்–அனிருத் கூட்டணி திரும்ப வருகிறது; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

More in Cinema News

To Top