Connect with us

நடிகை கௌதமி-க்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தலைமை..!!

Featured

நடிகை கௌதமி-க்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தலைமை..!!

பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி-க்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top