Connect with us

‘ராயன்’ திரைப்படத்தில் இணைந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி – வெளியான டக்கர் போஸ்டர்

Cinema News

‘ராயன்’ திரைப்படத்தில் இணைந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி – வெளியான டக்கர் போஸ்டர்

தனுஷ் இயக்கி நடிக்க உள்ள ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நாள் முதல் இப்படம் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நட்சத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Cinema News

To Top