Connect with us

விஜய் செய்த மாபெரும் உதவி – நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

Cinema News

விஜய் செய்த மாபெரும் உதவி – நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

நடிகர் சங்க கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதன் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 1 கோடி ருபாய் நிதி கொடுத்திருந்த நிலையில் அதற்கு நடிகர் விஷால் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார் .

தமிழ்நாட்டின் திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒருவழியாக தீர்வு காணப்பட்டு தற்போது மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கதின் கட்டுமான பணிகளுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொடுத்திருந்தார்.

அவரை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக சுமார் 1 கோடி ருபாய் நிதியை வழங்கி உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது .

இதையடுத்து விஜய் செய்த இந்த நிதி உதவிக்கு நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒவ்வருவராக நிதி வழங்கி வரும் நிலையில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Cinema News

To Top