Connect with us

மீண்டும் வருகிறான் கணியன் பூங்குன்றன்?! விஷால் கொடுத்த தரமான Update!

Cinema News

மீண்டும் வருகிறான் கணியன் பூங்குன்றன்?! விஷால் கொடுத்த தரமான Update!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இன்று காலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது அடுத்த பட அப்டேட்டை அறிவித்துள்ளார். விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’துப்பறிவாளன்’.

இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது வசூலிலும் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து விஷாலே இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் சற்றுமுன் ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் ஸ்டில் ஒன்றை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கும் பணியை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’துப்பறிவாளன்’ திரைப்படத்தில் கணியன் பூங்குன்றனார் என்ற கேரக்டரில் விஷால் நடித்திருந்த நிலையில் அவர் அடுத்த பாய்ச்சலுக்கு கிளம்பி விட்டார் என்று இந்த அறிவிப்பில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top