Connect with us

நடிகர் விஜய் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும்.. இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்

Perarasu_Vijay

Cinema News

நடிகர் விஜய் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும்.. இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு வலியுறுத்தியுள்ளார்.

சமீபகாலமாக தொடர்ந்து நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பரிசு, வெள்ள நிவாரண உதவிகள் என விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் களப்பணியாற்றி வந்த நிலையில், அவர் அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற பேச்சு கிளம்பியது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்க உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் என்பது தொழில் அல்ல என்றும், அரசியலில் ஈடுபடுவதற்காக தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது அரசியல் வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அவர் சினிமாவை விட்டு விலகுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதே கருத்தை திருப்பாச்சி, சிவகாசி என விஜயை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவும் தெரிவித்துள்ளார்.

பேரரசு இது குறித்து கூறுகையில், நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முந்தைய இரவு வரை தொடர்ந்து படங்களில் நடித்துள்ளதை குறிப்பிட்டு, அதேபோல் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி தடாலடி பேட்டிங் - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 242 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top