Connect with us

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Cinema News

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே வாரிசு . விஜய் நடிப்பில் உருவான இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.

சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , யோகி பாபு , குஷ்பு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் கமிட்டாகி நடித்திருந்தது .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பட்டய கிளப்பியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை குஸ்பு வாரிசு படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்படி அவர் கூறியதாவது :

வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
வேறு யாருடனும் எனக்கு அந்தப் படத்தில் காட்சிகள் இல்லை. ஆனால், அவை நீக்கப்பட்டது எனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது .

எனக்கும் விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம் அப்படிப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது உண்மையாகவே வலித்தது.

படம் திரையரங்குங்களில் வெளியான உடன் படக்குழுவுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது நடிகர் விஜய் , இயக்குநர் வம்சி ஆகியோர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  80களின் கனவுக் கன்னி ரேவதி: லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்கள் ஷாக்!

More in Cinema News

To Top