Connect with us

“தமிழக வெற்றி கழகம்” : நடிகர் விஜய் தொடங்கும் கட்சியின் பெயர் இதுதான்

Actor_Vijay_Tamilaga_Vetri_Kalagam

Cinema News

“தமிழக வெற்றி கழகம்” : நடிகர் விஜய் தொடங்கும் கட்சியின் பெயர் இதுதான்

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களுக்கு பரிசு, நலத்திட்ட உதவிகள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வந்ததால், அவரது அரசியல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் விஜயின் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் கசிந்ததோடு, இன்றே கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் ஒரு அதிகாரப்பூர்வ கணக்கை திறந்துள்ள நடிகர் விஜய், தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும், 2024 தேர்தல் முடிந்த பிறகு கட்சியை தொடங்கி மக்களை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜயின் இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடமும், அவரது ரசிகர்களிடமும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top