Connect with us

டார்க் காமெடி கதைக்களத்தில் நடிக்கவுள்ள நடிகர் வெற்றி!

Cinema News

டார்க் காமெடி கதைக்களத்தில் நடிக்கவுள்ள நடிகர் வெற்றி!

சேகர் ஜி புரோடக் ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் படத்தில் சத்யராஜ், வெற்றி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த டார்க் காமெடி படத்தை, நரேந்திர மூர்த்தி இயக்குகிறார்.

அமெரிக்கா, மலேசியாவில் ஆவணப்படங்களை இயக்கியுள்ள இவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். MS பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெரால்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார்.

“ஒரே இரவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடக்கும் கதை. நான்கு வெவ்வேறு வீடுகளில் நான்கு கொலைகள் நடக்கின்றன. அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த உடல்களை அபார்ட்மென்டுக்கு வெளியே எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் கதை.

பஞ்சதந்திரம் படத்தைப் போல, அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்பை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுக்கும்” என்கிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top