Connect with us

சிகிச்சைக்காக நிதியுதவி கேட்ட நடிகர் வெங்கல் ராவ் – ஓடி வந்து உதவிய KPY பாலா..!!

Cinema News

சிகிச்சைக்காக நிதியுதவி கேட்ட நடிகர் வெங்கல் ராவ் – ஓடி வந்து உதவிய KPY பாலா..!!

பிரபல காமடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ செலவுக்கு நிதி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது KPY பாலா நிதிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பல காமெடி வேடங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகர் வெங்கல் ராவ் . தமிழில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பட வாய்ப்பு இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தனக்கு ஒரு கை ஒரு கால் செயலிழந்த விட்டதாகவும் மருத்துவ செலவுக்கு நிதி வேண்டும் என்றும் வீடியோ மூலம் உதவி கேட்ருந்தார்.

இந்த வீடியோ செம வைரலாக வலம் வந்த நிலையில் முதல் ஆளாக நடிகர் சிம்பு 2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார் அவரை தொடர்ந்து தற்போது KPY பாலாவும் 1 லட்சம் நிதி கொடுத்து உதவியதுடன் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒன் மேன் ஷோவா? – பவன் கல்யாண் படம் விமர்சனம்!

More in Cinema News

To Top