Connect with us

“நடிகர் சூரியின் அடுத்த பட Shooting நிறைவு! வைரலாகிவரும் Photos!”

Cinema News

“நடிகர் சூரியின் அடுத்த பட Shooting நிறைவு! வைரலாகிவரும் Photos!”

காமெடி நடிகராக கலக்கும் அனைவருக்கும் கூடிய சீக்கிரமே ஹீரோவாக வேண்டும் என்கிற கனவு நாகேஷ் காலத்தில் இருந்து யோகி பாபு, புகழ் வரை இருக்கத்தான் செய்கிறது. அடுத்த நிலை வளர்ச்சிக்கு செல்ல முயல்வது அனைவரது விருப்பமாகவும் அதற்கு தேவையான உழைப்பை அவர்கள் சிந்துகின்றனரா என்பதில் தான் உள்ளது. சந்தானம் காமெடியனாக இருந்து சிரிக்க வைத்து வந்த நிலையில், ஹீரோவாக மாறிய பின்னரும் தொடர்ந்து நகைச்சுவை படங்களிலேயே நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடியை ஒதுக்கி வைத்து விட்டு நடித்த நிலையில், ஸ்கோர் செய்திருந்தார். ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி என சூரியின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரெடியாகி விட்டன. நேற்று வெளியான ஏழு கடல் ஏழு மலை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி உடன் இணைந்து சூரி நடித்துள்ளார்.

கொட்டுக்காளி படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து சர்வதேச விழாக்களுக்கு அந்த படம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கருடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்கிற சூடான செய்தியை சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஷேர் செய்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்காக வெற்றிமாறன் வைத்திருந்த கதை தான் கருடன் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், சசிகுமார் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top