Connect with us

பிரபல தெலுங்கு நடிகர் படத்தில் இணைந்த நடிகர் SJ சூர்யா! Viral Pic!

Cinema News

பிரபல தெலுங்கு நடிகர் படத்தில் இணைந்த நடிகர் SJ சூர்யா! Viral Pic!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்ட SJ சூர்யா தற்போது தெலுங்கு திரையுலகிலும் பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் SJ சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’சரிபோதா சனிவாரம்’.

இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் மற்றும் முக்கிய இடத்தில் சாய்குமார் நடித்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் SJ சூர்யா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் படப்பிடிப்பு முடியும் என்று தெரிகிறது.

ஏற்கனவே தமிழ் திரை உலகில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’, தனுஷின் ’டி50’, விக்னேஷ் சிவனின் ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ போன்ற படங்களில் SJ சூர்யா நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கிலும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top