Connect with us

கேப்டன் விஜயகாந்த்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி..!!

Cinema News

கேப்டன் விஜயகாந்த்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி..!!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடுமையான நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கும் பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவின் தொண்டர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் கேப்டனுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் சூர்யா புகழ் ஜெயம் ரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து மனமுருக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விஜயகாந்த்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்து கேப்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Cinema News

To Top