Connect with us

நடிகர் சிம்புவிற்கு ஜோடியாகிறாரா பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்! மொத்தம் 3 ஹீரோயினா?!

Cinema News

நடிகர் சிம்புவிற்கு ஜோடியாகிறாரா பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்! மொத்தம் 3 ஹீரோயினா?!

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’சிம்பு 48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அன்றைய தினமே இந்த படத்தின் நாயகிகள் அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஹீரோ வில்லன் என இரண்டு வேடங்களில் சிம்பு நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டு நடிகைகள் ஜோடியாக நடிக்க உள்ளனர். அவர்களின் ஒருவர் தீபிகா படுகோன் என்று கூறப்படுகிறது.

இன்னொருவர் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக வில்லன் சிம்புவுக்கு தீபிகா படுகோன், ஹீரோ சிம்புவுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் தீபிகா படுகோன், சிம்புக்கு ஜோடியாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ என்ற ஒரே தமிழ் படத்தில் மட்டுமே தீபிகா படுகோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top