Connect with us

“சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்க RJ பாலாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?!”

Cinema News

“சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்க RJ பாலாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?!”

2011 ஆம் ஆண்டில் வெளியான ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இந்த படம் ஓரளவுக்கு இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இவர் இயக்கியிருக்கிறார். தற்போது இவர் RJ பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இதில், ஹீரோவாக நடிகர் RJ பாலாஜி, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், லால், கிஷென் தாஸ், ஆன்னி ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் லீட்ரோலில் நடித்துள்ளனர். சிங்கப்பூர் சலூன் என்று படத்தின் பெயரை கேட்டதுமே சலூனை மையமாக வைத்த படம் தான் என்பது நமக்கு தெளிவாக தெரிந்துவிடுகிறது. RJ பாலாஜி தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவை(லால்) பார்த்து இன்ஸ்பையர் ஆகிறார்.

ஒரு நாள் நானும் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு. இன்ஜினியரிங் படித்திருக்கும் கதிர், பல தடைகளை தாண்டி சென்னையில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் கடை ஒன்றை திறக்கிறார். இந்த கடையை லோகேஷ் கனகராஜ் திறந்து வைக்கிறார். இதில் ஜான் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்து இருக்கிறார். இவரும் சலூன் கடை வைத்து இருப்பதால், தனக்கு போட்டியாக கடையை திறந்த RJ பாலாஜிக்கு பலவிதத்தில் பிரச்சனையை கொடுக்கிறார்.

சலூன் கடை வைத்தால் ஏழையாத்தான் இருக்கணுமா என்ற கான்செப்டையும், முடிவெட்டுவது ஒன்றும் நகம் வெட்டும் வேலை இல்லை அது ஒரு கலை என்ற கருத்தையும் படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் கோகுல். இறுதியில், கதிர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை. தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்காக RJ பாலாஜி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ரூபாய் 8 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top