Connect with us

“குறி வைச்சா இரை விழனும்” வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் – வைரல் வீடியோ..!!

Cinema News

“குறி வைச்சா இரை விழனும்” வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் – வைரல் வீடியோ..!!

மின்னல் வேகத்தில் ரிலீசுக்கு தயாராகி வரும் வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் இறங்கியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் . மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் தலைவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வர அனல் பறக்க நடைபெற்று வந்த படப்பிடிப்பும் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் கமிட்டாகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரை நட்சத்திரங்கள் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில் இறங்கியுள்ளார் .

குறி வைச்சா இரை விழனும் என்ற வசனத்துடன் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் அந்த வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top