Connect with us

துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸ் – தட்டி தூக்கிய பாதுகாப்பு படையினர்..!!

Cinema News

துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸ் – தட்டி தூக்கிய பாதுகாப்பு படையினர்..!!

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ் . நடிப்பதை தாண்டி முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியையும் கருணாஸ் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி செல்வதற்காக கருணாஸ் விமான நிலையம் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக கருணாஸ் கூறியுள்ளார். எவ்ளவோ விளக்கம் கொடுத்ததும் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சிம்பு – விஜய் சேதுபதி காம்போ confirmed! வில்லனா? mass role-ஆ? அரசன் trending!

More in Cinema News

To Top