Connect with us

“அதிரடியாக வெளியான கமலின் KH 237 Update! மீண்டும் இணையும் MEGA கூட்டணி!”

Cinema News

“அதிரடியாக வெளியான கமலின் KH 237 Update! மீண்டும் இணையும் MEGA கூட்டணி!”

கடந்த 2022ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதனையடுத்து மீண்டும் நடிப்பிலும் தயாரிப்பிலும் பிஸியாகிவிட்டார் உலக நாயகன். ஷங்கருடன் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கிய கமல், சில தினங்களுக்கு முன்னர் நடித்தும் முடித்துவிட்டார். இன்னொரு பக்கம் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் மே 9ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு இன்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் ஒரு தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ள கமல்ஹாசன், இதன் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார். தக் லைஃப் படத்தில் கமலுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் கமல் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாரத நேரத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கமல். அதன்படி கமலின் KH 237 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கவுள்ளனர். கேஜிஎஃப், விக்ரம் உட்பட ஏராளமான படங்களுக்கு ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்து பிரபலமானவர்கள் அன்பறிவு பிரதர்ஸ். இவர்கள் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், திடீரென கமலுடன் இணைந்து மிரட்டியுள்ளனர். விக்ரமை தொடர்ந்து கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்துக்கும் அன்பறிவு மாஸ்டர்ஸ் தான் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்போது அவர்களே நேரடியாக ஒரு படத்தை கமலுக்கு இயக்கவுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேநேரம் இது கமலின் 237வது படமாக உருவாகவுள்ளது. அப்படியானால் 235, 236வது படங்கள் என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.

அதில் ஒன்று கல்கி படமாக இருந்தாலும் ஏற்கனவே ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருந்த KH 233 படம் வேறு ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், KH 235 கல்கி படமாகவும், KH 236 லோகேஷ் இயக்கும் விக்ரம் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தான் அன்பறிவு மாஸ்டர்ஸ் படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

See also  ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH - LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top