Connect with us

“குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்..! குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன்!”

Cinema News

“குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்..! குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன்!”

இன்றைய தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இதற்கான தீர்மானம் கடந்த 1964ம் ஆண்டில் நேருவின் மறைவிற்கு பின்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20ம் தேதிதான் இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வந்தது.

இன்றைய தினம் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனும் தன்னுடைய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீங்கில்லாத மகிழ்வான கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் கமல்ஹாசன் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தை சிரிப்பு என்றும் குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளனர். முன்னதாக முன்னாள் பிரதமர் மறைந்த நேருவின் பிறந்தநாளுக்கும் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நேரு பிறந்தநாளில் அவர் செய்த சீர்த்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம் என்று கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முக்கியமான நாட்களிலும் கமல்ஹாசன் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூழலில் இன்றைய தினம் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் மற்றும் அதையொட்டிய குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top