Connect with us

தனுஷின் D51 படத்தின் அடுத்த Update! அப்டேட் மழையில் ரசிகர்கள்!

Cinema News

தனுஷின் D51 படத்தின் அடுத்த Update! அப்டேட் மழையில் ரசிகர்கள்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51வது படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

இதில் நடிகர் நாகர்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்டமாக படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நாகர்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாலை 4:05 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top