Connect with us

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்..! நடிகர் தனுஷூக்கு நேரில் அழைப்பு!

Cinema News

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்..! நடிகர் தனுஷூக்கு நேரில் அழைப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவாி 22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை, ஆர்எஸ்எஸ் அமைப்பினா் உள்ளிட்டோர் செய்து வருகின்றனா். ஜன.22 அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் பல்வேறு பிரமுகா்களும் அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் நடிகா் தனுஷை இன்று நேரில் சந்தித்து கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக நிர்வாகி நரசிம்மன் உள்ளிட்டோா் நடிகா் தனுஷை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனா்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் தனுஷூக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “‘டியூட்’ படம்: Oorum Blood பாடல் நூறு மில்லியன் சாதனை!”

More in Cinema News

To Top