Connect with us

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் – ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

Cinema News

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் – ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் அவருக்கும் எனக்கும் பிடித்த புத்தம் புதிய விலையுர்ந்த காரை வாங்கி உள்ளதாக ஷாலினி போட்டோவுடன் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அதை சிறப்பாகவும் தரமாகவும் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்காக தனது முழு உழைப்பையும் போட்டு நடித்து வருகிறார் .

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி முழுக்க முழுக்க இப்படம் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் எந்த அளவிற்கு சினிமாவின் மேல் காதல் வைத்திருக்கிறாரோ அதேபோல் கார் மற்றும் பைக் மீது அதீத காதல் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அடிக்கடி கார் மற்றும் பைக்குடன் ஜாலியாக ரைடு செய்து வரும் நடிகர் அஜித் தற்போது புத்தம் புதிய விலையுர்ந்த காரை வாங்கியுள்ளார் . இந்த செய்தியை ஷாலினி அறிவித்து அந்த காரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

வெள்ளை நிற Porsche காரை வாங்கியுள்ள அஜித் காருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது. இந்த Porsche காரின் விலை ரூ. 2 முதல் ரூ. 4 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க…” – துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் அப்டேட் 🎬⭐

More in Cinema News

To Top