Connect with us

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் – வைரல் போட்டோஸ்..!!!

Featured

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் – வைரல் போட்டோஸ்..!!!

தமிழகம் கண்டெடுத்த தங்கமகனான கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இதில் ( SRH ) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தமிழக வீரர் நடராஜன் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார்.

யார்கர் கிங் என்று செல்லப்பெயருடன் அழைக்கப்படும் நடராஜன் இன்று தனது 33வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார் .

சக வீரர்களுடன் ஹைதராபாத்தில் நடராஜனின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விழாவில் நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனை மனதார வாழ்த்தி உள்ளார்.

நடராஜன் மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொள்ளும் புகைப்படங்கள் தாப்ரோது சமூக வலைதளங்களில் தீயாக பரவி செம வைரலாகி வருகின்றன.

நடராஜனின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது அஜித்தின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top