Connect with us

என் மனைவிதான் என் மகளின் இந்த நிலைக்கு காரணம்” – அபிஷேக் பச்சன் ஓபன் டாக்..

Featured

என் மனைவிதான் என் மகளின் இந்த நிலைக்கு காரணம்” – அபிஷேக் பச்சன் ஓபன் டாக்..

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, பாலிவுட் சினிமாவில் தனது கணிசமான இடத்தை நிலைநிறுத்தினார். முக்கிய நடிகர்களுடன் இணைந்து, பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற சில தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் மட்டுமே தோன்றியிருந்தாலும், அவை அனைத்தும் மக்கள் மனதில் ஆழம் பதிந்தவை.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். தற்போது 13 வயதான ஆராத்யா, தனது தாயைப் போலவே திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக மிளிர்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், தனது மகள் ஆராத்யாவைச் சுற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் விவகாரங்களைப்பற்றி நடிகர் அபிஷேக் பச்சன் அளித்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.


“எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம், ‘என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை’ என்றெல்லாம் ஒருபோதும் நான் பேசியதில்லை. ஆனால் இப்போது அவள் வளர்ந்துவிட்டாள். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறாள் என நம்புகிறேன்.
ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. அவளிடம் தொலைபேசியும் இல்லை. இதற்கான முழுப் பெருமையும் என் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கே சேரும். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை மற்றும் மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்கை பாருங்க!

More in Featured

To Top