Connect with us

மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷமார் ஜோசப்புக்கு டிவில்லியர்ஸ் பாராட்டு!

Sports

மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷமார் ஜோசப்புக்கு டிவில்லியர்ஸ் பாராட்டு!

மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்றது. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது. இதனிடையே மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்த ஷமார் ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து பாராட்டியுள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஷமார் ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றை விக்கிபீடியா பக்கத்தில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அவரது வாழ்க்கை வரலாறு ஊக்கமளிக்கும்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top