Connect with us

“8 மணி நேரம் வேலை நியாயம் தான்” – தீபிகா மறுத்த வேலையைப் பற்றி ஜெனிலியாவின் அதிரடி பதில்..

Featured

“8 மணி நேரம் வேலை நியாயம் தான்” – தீபிகா மறுத்த வேலையைப் பற்றி ஜெனிலியாவின் அதிரடி பதில்..

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, அதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

தமிழ் மொழியில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘சச்சின்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களில் நடித்த ஜெனிலியா, ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா, இரு மகன்கள் – ரியான் மற்றும் ரஹீல் ஆகியோரை பெற்றுள்ளார்.

தற்போது, அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஜெனிலியா, தனது வேலை நேரம் குறித்து பகிர்ந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “8 மணி நேரம் வேலை செய்வது கடினமானது தான். ஆனால் அது முடியாதது இல்லை. தாய்மார்களுக்கு இது மேலும் சவாலானது. இருப்பினும் அதை சமாளிக்க முடியாததல்ல.

நான் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறேன். சில சமயங்களில் 11 அல்லது 12 மணி நேரம் கூட வேலை செய்வேன். இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனே, 8 மணி நேர வேலை ஒப்பந்த காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகியிருந்த நிலையில், ஜெனிலியாவின் இந்த கருத்து புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top