Connect with us

7ஜி ரெயின்போ காலனி 2 – ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் அப்டேட்!

Featured

7ஜி ரெயின்போ காலனி 2 – ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் அப்டேட்!

2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற காதல் திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுவது விசேஷம். செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரும் வெற்றியை பெற்றது.

ஒரு தலை காதல், காதலின் பிரிவு, பிரிவின் வலி ஆகிய உணர்வுகளை ஆழமாகச் சொன்ன இப்படம், விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் கூறியதுப்போல், 7ஜி ரெயின்போ காலனி 2 படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

படக்குழுவின் திட்டமிட்ட வெளியீடு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும், வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top