Connect with us

ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி : சென்னையில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 77 குற்றவாளிகள் கைது..!!

Featured

ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி : சென்னையில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 77 குற்றவாளிகள் கைது..!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 77 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5 ஆம் தேதி மாலை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

சென்னையை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அருண் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் ரவுடிகளுக்கு எதிராக பல அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 77 பேர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், சென்னை காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக காவல்துறையினர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைள் தற்போது ரவுடிகள் மத்தியில் மரண பீதியை ஏற்ப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “பிப்ரவரியில் கிளம்பும் அஜித் புதிய படம் – ஆதிக் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!”

More in Featured

To Top