Connect with us

74 வயதிலும் பிட்டாக இருக்கும் ரஜினிகாந்தின் டயட் சீக்ரெட்!

Featured

74 வயதிலும் பிட்டாக இருக்கும் ரஜினிகாந்தின் டயட் சீக்ரெட்!

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும் மிகப்பெரிய புகழைப் பெற்றவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான “வேட்டையன்” படம், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், “ஜெயிலர்” படத்தின் வெற்றியை அடையவில்லை. இப்போது, “வேட்டையன்” படம் சரியான விமர்சனங்களை பெறாததால், அது இவ்வளவு பெரிய வெற்றியை இல்லாமல் விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்போது, ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ரஜினிகாந்த் தினமும் அரைமணி நேரம் எளிமையான யோகா பயிற்சி மற்றும் அரைமணி நேரம் நடை பயிற்சி செய்கிறார்.

இவருடைய பண்ணை வீட்டில் செடிகளை பராமரிப்பதும் அவருக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் அல்லது தனியாக தனது பண்ணை வீட்டிற்கு சென்று அவற்றை பார்த்து கொண்டே நடப்பது மிகவும் பிடிக்குமாம்.

மேலும், தனது உணவுப் பழக்கங்களில் ரஜினிகாந்த் ஃபாஸ்ட் ஃபுட், மயோனைஸ், அசைவ கொழுப்புகள், வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, செயற்கை இனிப்புகள் போன்றவற்றை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் புரொட்டீன் நிறைந்த உணவுகள் அதிகம் உட்கொள்கிறார்.

இந்த வாழ்க்கைமுறை, ரஜினிகாந்தின் ஆரோக்கியம் மற்றும் தொழில்துறை வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசியல்வயப்படுங்க பசங்களா?” – தேவர் விழாவில் விஜய்யை விமர்சித்த மோகன் ஜி!

More in Featured

To Top