Connect with us

தீபாவளிக்கு ரிலீசாக போகும் 5 படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுக்க வரும் பிரதீப்

Pradeep-Ranganathan-Love-Today

Cinema News

தீபாவளிக்கு ரிலீசாக போகும் 5 படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுக்க வரும் பிரதீப்

Diwali Movies: தீபாவளி என்றாலே பட்டாசு, வான வேடிக்கை என்பது மட்டுமில்லாமல் சொந்த ஊருக்கு சென்று குடும்பமாக இருந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாகத்தான் தீபாவளி அமைந்து வருகிறது. அந்த வகையில் இதை இன்னும் மெருகேற்றும் விதமாக தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் புது படங்களை பார்ப்பதற்கு மக்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது. அந்த படங்கள் பற்றி சிறு தொகுப்பாக பார்க்கலாம்.

Dude: இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டியூட் (Dude). இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பிரதீப் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன் எதிர்பார்த்த அளவையும் தாண்டி வசூல் அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதையும் குளிர வைத்து விட்டது. அதே மாதிரி இந்த படமும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

இதே மாதிரி பிரதீப் நடிப்பில் இன்னொரு படமும் வரப்போகிறது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப், எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி நடிப்பில் lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படமும் உருவாகி இருக்கிறது. இந்த படத்தையும் டியூட் படத்தையும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக தீபாவளிக்கு முன்னதாக வருகிற 17-ம் தேதி திரையரங்குகளில் வரப்போகிறது.

இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படமும் உருவாகி இருக்கிறது. இந்த படமும் தீபாவளி பண்டிகை ஒட்டி அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசாக போகிறது. அடுத்ததாக சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் அதுல்ய ரவி நடிப்பில் டீசல் என்ற படமும் தயாராகி இருக்கிறது. இப்படமும் வருகிற 17ஆம் தேதி ரிலீசாக போகிறது. மேலும் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் நகைச்சுவை படமாக கம்பி கட்டின கதை என்ற படம் தீபாவளிக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித்துக்கு கூஜா தூக்கிய பார்த்திபன், விமர்சனங்களால் தாக்கப்பட்ட விஜய்
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top