Connect with us

3BHK திரைப்படம் முதல் நாளில் உருவாக்கிய சாதனை! வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

3BHK திரைப்படம் முதல் நாளில் உருவாக்கிய சாதனை! வசூல் எவ்வளவு தெரியுமா?

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். அந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய ‘குருதி ஆட்டம்’ திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்த திரைப்படத் தோல்வியுக்குப் பிறகு, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி, தற்போது வெளியாகியுள்ள படம் தான் ‘3BHK’. இந்த படம் யதார்த்தமான, வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘3BHK’ திரைப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா ஜே. அச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘3BHK’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 1.5 கோடி வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top