Connect with us

8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Featured

8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீ கணேஷ். 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிகரமாக அறிமுகமான அவர், அதன் பிறகு குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்தப் பின்னணியில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் 3BHK. மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் திரைக்கு வந்த 3BHK திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், 3BHK திரைப்படம் உலகளவில் வெளியான 8 நாட்களில் ரூ. 9 கோடி வரையான வசூலை ஈட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இயக்குநர் ஸ்ரீ கணேஷிற்கும் படக்குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனிப்பட்ட உரையாடல் கசிவு: சட்ட நடவடிக்கை எச்சரிக்கை விடுத்த ராஷ்மிகா மந்தனா!

More in Featured

To Top