Connect with us

35வது பிறந்த நாளில் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?

Featured

35வது பிறந்த நாளில் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?

இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான பிரியா பவானி ஷங்கரின் 35வது பிறந்தநாள். நடிகை பிரியா, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் பயணத்தில் பெரும் வெற்றியடைந்தவர். இந்த ஆண்டு, அவரது நடிப்பில் “இந்தியன் 2”, “ரத்னம்”, “டிமான்டி காலனி 2”, “ப்ளாக்” ஆகிய படங்கள் வெளியானது. அதில் “டிமான்டி காலனி 2” மற்றும் “ப்ளாக்” படங்கள் மிகவும் வெற்றியடைந்தன.

இந்நிலையில், பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளமாக ரூ. 30 லட்சம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள BMW X1 கார் மற்றும் காண்டோ கார் ஆகியன இருக்கின்றன. கடற்கரை ஓரத்தில் பிரியா பவானி ஷங்கருக்கு சொந்தமான வீடு ஒன்றும் உள்ளது. மொத்தமாக, இவரது சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 நவம்பர் 2 ஆம் தேதி, இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிக்கு அது ஒரு வரலாற்று நாள்.

More in Featured

To Top