Connect with us

22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படங்களின் பெயர்கள் வெளியீடு..!!

Cinema News

22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படங்களின் பெயர்கள் வெளியீடு..!!

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படங்களின் பெயர்கள் தற்போது வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

22-வது புனே சர்வதேச திரைப்பட விழா 2024 வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் 25 வரை 8 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமா பிரிவில் ஏரளமான திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது .

இந்நிலையில் தற்போது இந்திய சினிமா சார்பில் இந்த பிரம்மாண்ட விழாவில் திரையிடபோகும் திரைப்படங்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விடுதலை’, சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’, ஜெயப்பிரகாஷின் ‘காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளன.

இதேபோல் மலையாளத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’, ஜோஜு ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top