Connect with us

2024: திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள் – முழு விவரங்கள்..

Featured

2024: திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள் – முழு விவரங்கள்..

இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதில் முக்கியமான சிலர்:

  1. நாக சைதன்யா: சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற பிறகு, நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மறுமணம் செய்தார்.

2. கீர்த்தி சுரேஷ்: 15 வருடங்கள் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ், 2024 டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.

3. சித்தார்த்: சித்தார்த், நடிகை அதிதி ராவை குடும்ப வழக்கப்படி ஒரு பாரம்பரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

4. வரலட்சுமி சரத்குமார்: நடிகர் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் சர்ச் தேவுடன் திருமணம் செய்தார்.

5. மேகா ஆகாஷ்: இளம் நடிகை மேகா ஆகாஷ், அரசியல் வாரிசான விஷ்ணுவுடன் 2024 செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

6. காளிதாஸ்: மலையாள நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ், தாரணி காளிங்கராயர் என்பவரை 2024 டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணங்கள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top