Connect with us

2 மாதங்களில் நாகசைதன்யாவின் திருமண வாழ்க்கை: அவர் கூறிய உண்மைகள்!

Featured

2 மாதங்களில் நாகசைதன்யாவின் திருமண வாழ்க்கை: அவர் கூறிய உண்மைகள்!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகசைதன்யா, நடிகர் நாகர்ஜுனாவின் மகன். 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாகசைதன்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து, நடிகை சோபிதாவை காதலித்து, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.

இப்போது, நாகசைதன்யா நடிப்பில் தண்டல் திரைப்படம் வரும் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தன் மனைவி சோபிதா பற்றி அவர் பகிர்ந்த கருத்து அதிகம் பேசப்பட்டது.

“என் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன். 2 மாதங்கள் மட்டும் ஆகிறது.

சினிமா மற்றும் வாழ்க்கையை சமமாக கொண்டு சென்று வருகிறோம். நாங்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள், ஆனால் ஒரே நகரங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. சோபிதா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், கலாச்சார ரீதியில் எங்கள் இடையே நிறைய தொடர்பு இருக்கிறது” என அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top