Connect with us

“Thug Life படத்தின் முதல் Schedule முடிந்தது! அடுத்தகட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா?!”

Cinema News

“Thug Life படத்தின் முதல் Schedule முடிந்தது! அடுத்தகட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா?!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல படக்குழு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ரஷ்யா, சைபீரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் அங்கு பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படம் முழுவதும் கமல்ஹாசன் தாடியுடன் தோன்றுவார் என்றும் ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு ஆச்சரியமான திரைக்கதையுடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் எடுத்து வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனஙக்ள் தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அஞ்சலி - வைரல் போட்டோ..!!

More in Cinema News

To Top