Connect with us

1970ம் ஆண்டு நடிகர் சிவகுமார் வாங்கிய கார்! விலை எவ்வளவு தெரியுமா?

Featured

1970ம் ஆண்டு நடிகர் சிவகுமார் வாங்கிய கார்! விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான பிரபல நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக திகழும் பெயர். 1965ம் ஆண்டில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய இவர், பல்வேறு முக்கியப்படங்களில் நடித்துள்ளார்.

சிந்து பைரவி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அன்னக்கிளி, கந்தன் கருணை உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நடிப்புப் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. சுமார் 190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. வெள்ளித்திரையைத் தவிர, சின்னத்திரையிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காவேரி, அண்ணாமலை, சித்தி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் “மார்க்கண்டேயன்” என அழைக்கப்படும் சிவகுமாருக்கு தற்போது 83 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் சிவகுமார் தனது வாழ்க்கையில் பயன்படுத்திய முக்கிய வாகனங்களில் ஒன்றாக Fiat Classic கார் குறிப்பிடப்படுகிறது. இந்த காரை அவர் 1970ம் ஆண்டு, நான்காவது உரிமையாளராக ரூ. 12,000 கொடுத்து வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. 50 ஆண்டுகளாக இந்த காரைப் பாதுகாத்து, இதுவரை பயன்படுத்தி வருவதைப் பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top