Connect with us

“சினிமா செட்டில் 12 மணி வேலை சுமை! 8 மணி வேலை கோரிக்கைக்கு கீர்த்தி ஆதரவு!”

Cinema News

“சினிமா செட்டில் 12 மணி வேலை சுமை! 8 மணி வேலை கோரிக்கைக்கு கீர்த்தி ஆதரவு!”

சமீபத்தில் தீபிகா படுகோன் “நான் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன்” என்ற கோரிக்கையால் பெரிய சர்ச்சை எழுந்தது. அதற்கு ராஷ்மிகா உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது கீர்த்தி சுரேஷும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்.

“நாங்கள் படப்பிடிப்பை முடித்து, வீடு திரும்பும் நேரம் இரவு 10 மணியாகிவிடுகிறது. அதற்கும் முன்பாக தொழில்நுட்பக் குழுவினர் அதிகாலையிலேயே செட்டில் இருக்கும். ஒரு நாளுக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் அவர்கள் வேலை செய்கிறார்கள். இத்தனை நேரம் வேலை செய்வதால் ஆரோக்கியத்தை காப்பாற்றுவது அனைவருக்கும் சவாலாகிறது.

ஒவ்வொருவருக்கும் 8 மணி நேர தூக்கம் அவசியம். ஆனால் நடிகர்கள் உட்பட தொழில்நுட்பக் குழுவினருக்கு அது கூட அரிதாகிவிட்டது. பல நேரங்களில் நான்கு மணி நேரம் கூட properly தூங்க முடியாத நிலை,” என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top